பல வருடங்கள் கழித்து விஜய்யை சந்தித்த ரம்பா... ( படங்கள் )
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடித்த பிரபலங்கள் பலரும் அவரை சந்தித்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்று. அப்படி தான் விஜய்யுடன் மின்சார கண்ணா, என்றென்றும் காதல், சுக்ரன், நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரம்பா சந்தித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு ரம்பா தனது குடும்பத்துடன் விஜய்யை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ரம்பா கணவர் இந்திரகுமார் பத்மநாதன் விஜய்யுடன் தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின் ரம்பாவின் குழந்தைகள் சாஷா பத்மநாதன், லாவண்யா பத்மநாதன் ஆகியோரையும் தூக்கி கொண்டு விஜய் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
இந்த புகைப்படங்களை நடிகை ரம்பா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ” பல வருடங்கள் கழித்து உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது” என பதிவிட்டுள்ளார். புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வரும் நிலையில், புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் உங்க ரெண்டு பேருக்கும் வயசே ஆகவில்லை” என கூறி வருகிறார்கள்.மேலும், நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய 69-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments