ஆடி மாதம் பிறந்ததையொட்டி பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு


திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது.சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும்.

சனிக்கிழமை மாலை குடும்பத்துடன் வந்து பெரியபாளையத்தில் தங்கி காலையில் ஆடு, கோழி ஆகியவற்றை அம்மனுக்கு பலி கொடுத்து பொங்கல் படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்வது வாடிக்கை.கடந்த 12ஆம் தேதி பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இந்நிலையில் இன்று ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு முதல் நாளில் பெரியபாளையம் பவானி அம்மனை தரிசிப்பதற்காக பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தர தொடங்கியுள்ளனர்.

திருவள்ளூர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து பாத யாத்திரையாகவும், கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு.ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.அம்மன் சன்னதியில் பக்தர்கள் வாடை பொங்கலிட்டு தீபமேற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், வேப்பஞ்சேலை அணிந்தும், அம்மனுக்கு கூழ் வார்த்தும், கரகம் ஏந்தி வந்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி செல்கின்றனர்.

அரசு விடுமுறை தினம் என்பதால் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

 கும்மிடிப்பூண்டி செய்தியாளர் எம் சுந்தர்

Post a Comment

0 Comments