செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3ல் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றத் தவறிய தி.மு.க. அரசை கண்டித்து சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிட்லபாக்கம் வரதராஜா திரையரங்கம் அருகில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான கழகத்தினர் பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.
கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3ல் வசித்து வரும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றத் தவறியதோடு, இப்பகுதியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்யாத விடியா தி.மு.க. அரசையும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வலியுறுத்தியும் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பகுதி கழகச் செயலாளர் இரா.மோகன் ஏற்பாட்டில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமையில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கழக மகளிர் அணி இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கணிதா சம்பத், கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.இராமச்சந்திரன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் என்.சி.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடன் பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மதுரபாக்கம் எம்.பி மனோகரன் மற்றும் முடிச்சூர் கழக நிர்வாகிகள் ஸ்ரீ பாஸ்கர், கணேசன், தவமணி, ஆதிகேசவன், தாஸ், மூர்த்தி, குரங்கு பாபு, சிவா, மணி, விஜயன், பாலாஜி, ரமேஷ், சற்குணம், விஜய் கணேஷ், சுவாமி நகர் ரமேஷ், கற்பகம் மாமி, புவனேஸ்வரி, நித்யா முடிச்சூர் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments