• Breaking News

    ஊரப்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்


    ஊரப்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றுக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி மக்களுடன் முதல்வர் திட்டம் ஊரப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமை தாங்கினார்.

     துணை தலைவர் ரேகாகார்த்திக் வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். பின்னர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.டி.லோகநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், ஒன்றிய கவுன்சிலர்கள் மோகனாகண்ணன், ஜே.கே.தினேஷ், வார்டு உறுப்பினர் சாந்தி கார்த்திக்   உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் கருணாகரன் நன்றி கூறினார்.

    No comments