தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பணியை ஆரணி பேரூராட்சி யில் பொன்னேரி எம் எல் ஏ துரை சந்திரசேகர் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பணிக்கு 950 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்,13-வது வார்டில் 50 பணியாளர்களுக்கு இங்குள்ள பாப்பன்குளம் மேம்படுத்துவதற்கான பணியை ஒதுக்கி உள்ளனர். எனவே,ஆரணி பேரூராட்சியில் முதல்,முதலில் துவங்கிய இப்பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி ஆரணி 13-வது வார்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,பேரூராட்சிமன்ற தலைவர் எம்.ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமார், நியமனக்குழு உறுப்பினரும், முன்னாள் பேரூர் செயலாளருமான டி.கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்துகொண்டு பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
இதன் பின்னர், பணியாளர்களுக்கான பணி ஆணை அட்டைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், ஆரணி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரபாவதி, சதீஷ்,சுபாஷினி,முனுசாமி, ரகுமான்கான்,பொன்னரசி, பேரூர் திமுக துணைச் செயலாளர்கள் கோபிநாத், நிலவழகன்,பேரூராட்சி மன்ற அலுவலர்கள்,ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது பேரூராட்சிமன்ற உறுப்பினரும்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளரான ரஹ்மான்கான் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கினார். அந்த கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதி கூறினார்.
No comments