ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன்..... கவலைக்கிடமான நிலையில் தாய்.... - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 30, 2024

ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன்..... கவலைக்கிடமான நிலையில் தாய்....

 

கடலூர் மாவட்டம் வடலூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 24ஆம் தேதி மைதானத்தில் வைத்து ஈட்டி எறியும் பயிற்சி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் கிஷோர் என்ற சிறுவன் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் தலையில் ஈட்டி பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவனைக் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் அந்த சிறுவனின் தாயார் தன் மகன் மூளை சாவு அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மூளை சாவு அடைந்த சிறுவன் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டான். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் பிரவீன், ஆசிரியர்கள் பிரவீன் குமார், விநாயகமூர்த்தி மற்றும் சரவணன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment