அளவில்லாத மூடநம்பிக்கை.... கொதிக்கும் பால் பானைக்குள் பச்சிளம் குழந்தையை போட்டு நேர்த்திக்கடன் - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 30, 2024

அளவில்லாத மூடநம்பிக்கை.... கொதிக்கும் பால் பானைக்குள் பச்சிளம் குழந்தையை போட்டு நேர்த்திக்கடன்

 

உத்திரபிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய  வட மாநிலங்களில் காசிதாஸ் பாபா பூஜை என்பது பிரபலமாக நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையின் போது தற்போது பச்சிளம் குழந்தையின் மீது கொதிக்கும் பாலை ஊற்றியதோடு அந்த குழந்தையை கொதிக்கும் பானையில் பக்தர் ஒருவர் போட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெஞ்சை பதற வைப்பதாக இருக்கிறது.அந்த வீடியோவில் கொதிக்கும் பால் இருக்கும் பானைக்குள் குழந்தையை அமுக்க அவர் முயல்கிறார். ஆனால் அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் அழுததால் அந்தப் பாலை தன் மீதும் குழந்தை மீதும் ஊற்றினார். இதனால் அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் கத்தி கதறி துடிக்கிறது. 

இருப்பினும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. வேண்டுதல் என்ற பெயரில் இப்படி ஒரு கொடூரத்தனமான செயலை செய்தவருக்கு சமூக வலைதளத்தில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதனை பயனர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் பய இருந்துள்ள நிலையில் இது என்ன விதமான மூடநம்பிக்கை என்று கண்டித்துள்ளார்.

No comments:

Post a Comment