வாட்சப் ஸ்டேடஸில் உல்லாச வீடியோ..... பதறிய கள்ளக்காதலி - MAKKAL NERAM

Breaking

Saturday, July 20, 2024

வாட்சப் ஸ்டேடஸில் உல்லாச வீடியோ..... பதறிய கள்ளக்காதலி


 கோயம்புத்தூர் மாவட்டத்தில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த நரசிம்ம ராஜ் அரசு (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் நகை பட்டறை தொழிலாளி ஆவார். இவர்கள் இருவரும் பழகி வந்த நிலையில் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதன் பின் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்போது அது தொடர்பான வீடியோவை தன்னுடைய செல்போனில் நரசிம்ம ராஜ் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக கைபட்டு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் சென்றுவிட்டது. இதனை பலரும் பார்த்த நிலையில் அந்த பெண்ணிடம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோயம்புத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நரசிம்மராஜை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment