வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை - MAKKAL NERAM

Breaking

Friday, August 23, 2024

வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

 


பொதுவாக வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்தின்  கடைசி சனிக்கிழமை நாளை ஆகும். இதன் காரணமாக நாளை வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேப் போன்று அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு பொது விடுமுறை.

இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருவதால் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து 3 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை என்பதால் வாடிக்கையாளர்கள் ஏதேனும் முன்பதிகள் இருப்பின் இன்றே அதனை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment