• Breaking News

    3 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம்..... சாதித்தது என்ன...?

     


    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு  விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழ்நாடு தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதற்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்களில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கொண்டு வரப்பட்ட முதலீடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.2022 மார்ச் மாதம் துபாய்க்கு முதலமைச்சர் 5 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டபோது, 15,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.6,100 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.2023 மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்ற போது 2,000-க்கும்  மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.1,342 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினுக்கு 8 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற போது, ரூ.3,440 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2,500 கோடி, எடிபான் நிறுவனம் ரூ.540 கோடி, ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்ய உறுதி அளித்தன.

    No comments