புகாரை பெற ஒரு கிலோ ஜிலேபியை லஞ்சமாக கேட்ட காவல்துறையினர்
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் தனது செல்போனை தவறவிட்டுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு சென்ற அவர் செல்போனை தேடி பார்த்துள்ளார். ஆனால் செல்போன் கிடைக்கப்படவில்லை.
இதனால் மீண்டும் கடைக்கு சென்று அங்கு தேடி பார்த்துள்ளார். அங்கும் கிடைக்காததால் குமார் மன உளைச்சலுக்கு ஆளானார்.இந்நிலையில் குமார் புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு காவல்துறையினர் அவரை ஜிலேபி அல்லது பாதுஷா ஒரு கிலோ வாங்கி வருமாறு கூறினர்.
அதன்படி குமாரும் கடைக்கு சென்று ஜிலேபி வாங்கி வந்தால். அதன்பின் காவல்துறையினர் அவரது புகாரை பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு இதே போன்று காவலர் ஒருவர் பணியில் இருக்கும் போது உருளைக்கிழங்கை லஞ்சமாக பெற்றதற்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments