கும்பகோணம்: பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்..... பங்க் ஊழியர்களுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் - MAKKAL NERAM

Breaking

Monday, August 26, 2024

கும்பகோணம்: பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்..... பங்க் ஊழியர்களுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்

 


கும்பகோணம் அருகே தனியார் பெட்ரோல் பங்கில் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருந்ததால், ஏராளமான இருசக்கர வாகனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பியவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருந்ததால், வாகனங்கள் செயல்படாமல் ஆங்காங்கே நின்றன. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பங்க் நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள், கலப்பட பெட்ரோலை திருப்பிக் கொடுத்து அதற்குரிய தொகையைத் திரும்ப பெற்றனர்.

No comments:

Post a Comment