வேளாங்கண்ணி பேராலய திருவிழாவிற்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா 29.08.24 அன்று கொடியேற்றத்துடன் துவங்குவதையொட்டி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் வழிகாட்டுதலில் கீழையூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வே.பாலகுரு, திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ம.ஆண்டனிபிரபு, நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பொ.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சார்ந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வேளாங்கண்ணி பகுதியில் செயல்படும் உணவு விற்பனை நிலையங்களை இன்று ( 27.08.29 ) ஆய்வு செய்து வந்தனர்.
இன்று முதல்நாளில் 6 உணவு விற்பனை நிலையங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது, சுகாதாரமற்ற முறையில் கடையை வைத்திருந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 15 கிலோ அளவில் கெட்டுப்போன மீன்கள், 10 கிலோ அளவில் செயற்கை நிறமிகள் பயன்படுத்திய சிக்கன் ஆகியவை கைப்பற்றப்பட்டு, குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளை மீறுவோர் மீது அபராதம், நிறுவனத்தை செயல்படாமல் நிறுத்தி வைத்தல் மற்றும் வழக்கு தொடர்தல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது.
மக்கள் நேரம் (இணையதளம்) எடிட்டர்
நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு 9788341834
No comments