• Breaking News

    தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடி அறிமுகம் எப்போது....?

     


    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கான பணிகளை தற்போது தொடங்கிவிட்டார்.

     இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.விக்கிரவாண்டியில் நடைபெற இருப்பதாக கூறப்படும் முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு முன்பாக கட்சி கொடியை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக தவெக கட்சி கோடியில் வெற்றியை குறிப்பிடும் விதமாக “வாகை மலர்” இடம்பெறும் என செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments