• Breaking News

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் அத்தாணி வாரச்சந்தை மேம்பாட்டு பணிகளுக்கு அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்


    ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர்  ஒன்றியம் , அத்தாணி பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில்  அத்தாணி வாரச்சந்தை மேம்பாட்டு பணிகளுக்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜைசெய்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்  பெ.கணேசன் , உதவி செயற்பொறியாளர்  எம் .கணேசன் ,  செயல் அலுவலர்  ப.காசிலிங்கம் ,  இளநிலை பொறியாளர்  சி. சம்பந்த் மூர்த்தி, அத்தாணி பேரூர்  செயலாளர் ஏ.ஜி.எஸ்.  செந்தில் கணேஷ் , அத்தாணி பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.புனித வள்ளி செந்தில் கணேஷ் , அத்தாணி பேரூராட்சி மன்ற துணை தலைவர் எஸ்.லோகநாதன் மாவட்ட பிரதிநிதிகள் எம். சண்முகசுந்தரம் ,  ஏ.எம்.எஸ். மணி , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.பிரகாஷ் ,ஒன்றிய பிரதிநிதிகள் பாலு ,  கோதண்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் எம் .யுவராஜ் ,  அத்தாணி பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி. முருகன் மற்றும் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள்,  வார்டு  செயலாளர்கள், திமுக நிர்வாகிகள்,  தொண்டர்கள்,  பொதுமக்கள் என அனைவரும்  கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தள செய்திகள் ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments