வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.
ஹூஸ்ட்டன் சுகர்லேண்ட் சிட்டி ஹாலில் நடந்த போராட்டத்தில் பலர் பங்கேற்றனர். ஹிந்துக்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்தி தெற்காசியாவில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர் . இந்த போராட்டத்தில் 300 இந்தியர்கள் வங்கதேச வம்சாவளியை சேர்ந்த ஹிந்துக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கடந்த வாரத்தில் வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தற்போது அவரது புகலிடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய போராட்டத்தில் 290 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஹிந்துக்கள் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment