வடக்குப் பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் Cairns நகரில் இயங்கி வரும் ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலின் நீச்சல் குளம் அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த நட்சத்திர ஹோட்டலின் மேற்கூரையில் இன்று அதிகாலை 2 மணியளவில் விமானி உட்பட 2 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.ஹெலிகாப்டர் விழுந்த வேகத்தில் தீப்பற்றி எறிய தொடங்கியது. இந்நிலையில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஹோட்டலில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஹோட்டலில் இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
வானில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர்களின் 2 புரொபெல்லர்களும் [propellers] செயலிழந்ததால் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குப் பின் ஹெலிகாப்டர் தீப்பற்றியும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment