• Breaking News

    நடிகர் விஷாலை பொளந்து கட்டிய நடிகை ஸ்ரீரெட்டி

     

    மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மொத்த திரையுலகையும் அதிர்ச்சி குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக மலையாளத் திரையுலக நடிகர்கள் பலரும் சிக்கி வருகிறார்கள். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது தமிழ் திரையுலகிலும் மலையாள திரை உலகில் அமைக்கப்பட்டது போன்று பாலியல் அத்து மீறல்கள் தொடர்பாக விரைவில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அதோடு பெண்கள் முதலில் தைரியமாக இருக்க வேண்டும் எனவும், தவறான நோக்கத்தில் அணுகும் போது அவனை செருப்பாலே அடிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

    இதனை  தற்போது நடிகை ஸ்ரீரெட்டி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பெண்களை விரும்புபவரே. வெள்ளை முடி வயதான மாமா பெண்கள் பாதுகாப்பு பற்றி எல்லாம் நீ பேசலாமா. ஒரு பெண்ணை பற்றி பேசும்போது உன்னுடைய நாக்கு ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். நீ எவ்ளோ பெரிய ஃப்ராடு என்று இந்த உலகத்திற்கே தெரியும். நீ எல்லாம் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா. முதலில் உன்னை எதற்காக நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் பெண்கள் விட்டு சென்றார்கள் என்ற காரணத்தை அடுத்த முறை சொல். நீ எந்த பதவியில் இருந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. கர்மா ஏற்கனவே உனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வருகிறது. மேலும் என்னுடைய வீட்டில் விதவிதமாக நிறைய செருப்புகள் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

    No comments