பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகல்..... - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 6, 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகல்.....

 

பிரபல விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 வருடங்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற வாசகத்துடன் கமல்ஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

 இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.அதாவது சினிமா பணிகள் காரணமாக இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை என்னால் தொடர முடியாது என்றும் இதுவரை கொடுத்த அனைத்து ஆதரவுகளுக்கும் நன்றி என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகி சினிமா வாய்ப்புகள் மூலம் வளர்ச்சி அடைந்த நிலையில் அதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த கமல்ஹாசன் தற்போது அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment