திருச்சி: அடுத்தடுத்து தீ குளித்து இறந்த தோழிகள் - MAKKAL NERAM

Breaking

Monday, August 26, 2024

திருச்சி: அடுத்தடுத்து தீ குளித்து இறந்த தோழிகள்

 


திருச்சி மாவட்டம் அசூர் என்னும் பகுதியில் பவித்ரா(27) என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வந்தார். இவரது கணவர் வெளிநாட்டில் வெல்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பவித்ராவின் தோழியான சங்கீதா தீ குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்த பவித்ரா மன உளைச்சலுக்கு ஆளானார். பின் மனநலம் பாதித்தவர் போல் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளான்று அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதை பார்த்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை குறித்து வழக்கு பதிவு செய்தவுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment