• Breaking News

    சுபநிகழ்ச்சிகள், ஆன்மீக பயணங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

     


    அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  "அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிா்சாதன பேருந்துகள் மற்றும் குளிா்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் தொலைதூர பயணங்களுக்காக இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த சூழலில் குழுவாக சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும்,  அறுபடைவீடு கோயில்கள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில், குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும். இந்த பேருந்து வசதி சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு மட்டுமின்றி, பிற இடங்களில் இருந்தும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி: 9445014402, 9445014424, 9445014463 எனும் எண்களை தொடா்பு கொள்ளலாம்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments