அறந்தாங்கியில் கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் வெள்ளி விழா..... அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பரிசுகளை வழங்கினர்.....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் வெள்ளி விழாக் கொண்டாட்டம், அறந்தாங்கி டிஎன்எஸ் மண்டபத்தில் நடைபெற்றது.அமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் சுரேஷ்குமார் விழாவைத் தொடங்கி வைத்தார்.
செயலர் ராஜா, பொருளாளர் விஸ்வமூர்த்தி, இணைச் செயலாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் காசிநாதன், ஒருங்கிணைப்பாளர் சேகர், செயற்குழு உறுப்பினர்கள் சரவணகுரு, பாலன், பாலு, வேணுகோபால், சிவகிருபாகரன், முத்தழகு, வீரசேகர், நாகராஜ், நந்தகுமார், தாமரைக்கண்ணன், ஆதம்ஸ் சித்தார்த்தன்,செங்கமாரி சிவக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பேச்சு, குட்டீஸ் சுட்டீஸ், பெஸ்ட் ப்ரண்ட், மாறுவேடம், நடனப்போட்டி, தங்கத்தம்பதியர் ஆகிய போட்டிகள் நடத்தப்பெற்றன. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மரபின் மைந்தன் முத்தையா, முத்துப்பட்டினம் தொழிலதிபர் ராமச்சந்தின், நெற்குப்பம் தொழிலதிபர் அகிலன், திரைப்பட நடிகர்கள் போஸ் வெங்கட், விமல், விஷ்வா, அறந்தை நிஷா, ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும், ரொக்கப்பரிசுகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப், திசைகள் மாணவர் வழிகாட்டு அமைப்பு, அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப், மகாசக்தி சேவா சமதி, அக்னிச்சிறகுகள் அறக்கட்டளை, நமது இல்லம், அறக்கட்டளை, அறந்தாங்கி கூடைப்பந்தாட்டக் கழகம், களப்பக்காடு கிரிக்கெட் கிளப் சமூக நல அறக்கட்டளை, ஹீல்டு ட்ரஸ்ட், ஃபைட்டிங் ஸ்டார் கூடைப்பந்தாட்டக்கழகம், புன்னகை அறக்கட்டளை ஆகிய சேவை அமைப்புகளின் காட்சித் தொகுப்புகள் திரையிடப் பெற்று சார்ந்த அமைப்பினர் கவுரவிக்கப்பெற்றனர்.
வைரிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆவணத்தாங்கோட்டை (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி, மணமேல்குடி அரசுப்பள்ளிகளுக்கு செல்லத்துரை குடும்பத்தினர் வழங்கிய எல்இடி தொலைக்காட்சிப் பெட்டிகளும், நாயக்கர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு முத்து வழங்கிய பீரோவும் வழங்கப் பெற்றன.
கலைத்திறன் போட்டிகளில் அதிக வெற்றிப் புள்ளிகளைக் குவித்த வீரியங்கோட்டை அட்லாண்டிக் பன்னாட்டுப் பள்ளி கேபி25 கல்ட்சுரல் சாம்பியன்ஷிப் கோப்பையையும், 5025 ரூபாய் ரொக்கப்பரிசையும் தட்டிச்சென்றது.
உடற்கல்வி இயக்குநர் டாக்டர் விஜயரகுநாதன், வழக்கறிஞர் பத்மநாபன், மேனாள் தலைவர் துரை ரஞ்சன், சிட்டங்காடு ரஞ்சன், செல்வம், சரவணமுத்து, கராத்தே முத்துக்குமார், கராத்தே பாலு, கராத்தே யோகேஸ்வரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைவருக்கும் இரண்டு நாட்களும் மதிய உணவும், மஞசள் பையும் மரக்கன்றுகளும் வழங்கப்பெற்றது. முன்னதாகப்பொருளாளர் விஸ்வமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிறைவாகச் செயற்குழு உறுப்பினர் சக்திகுமரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை பழனித்துரை, காசிநாதன், கிரண், சங்கீத்குமார், சுபாஷ்சந்திரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
விழா ஏற்பாடுகளைச்செயற்குழு உறுப்பினர்கள் ரஜினி, குமரய்யா கார்த்திக், விஜய், பரக்கத்துல்லா, பார்த்திபராஜா, வினோத்குமார், ராஜமாணிக்கம், ராஜேஷ், ஹர்ஷா உள்ளிட்ட பலரும் செய்திருந்தனர்.
No comments