நாகையில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் உணவு கலப்படம் பற்றிய ஆய்வு - MAKKAL NERAM

Breaking

Friday, August 16, 2024

நாகையில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் உணவு கலப்படம் பற்றிய ஆய்வு


 நாகப்பட்டினம், தொழிற்பயிற்சி மையம் வளாகத்தில் இன்று ( 16.08.24 ) முதல் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக உணவு விற்பனை மையங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி, நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் இன்று ( 16.08.24 ) மாவை ஆய்வு செய்தார். அனைத்து உணவு விற்பனை நிலையங்களும் உணவு பாதுகாப்புத்துறையின் தற்காலிக பதிவு ( உரிமம்) சான்று உடன் பெறவேண்டும், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட முழுமையான விபரங்கள் அடைக்கப்பட்ட உணவு வகைகளில் இருக்க வேண்டும், உபயோகித்த சமையல் எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது, உணவு கைராள்பவர்கள் தன் யுத்தத்தை பேண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மீறுபவர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட சுகாதார அலுவலகத்தின் சுகாதார ஆய்வாளர் எம்.மணிமாறன் ஆய்வின்போது உடன் இருந்தார். 


மக்கள் நேரம் எடிட்டர் 

நாகை மாவட்ட நிருபர் க.சக்கரவர்த்தி

No comments:

Post a Comment