சோழவரம் ஆத்தூர் ஊராட்சியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமை மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில்.நோய்களை கண்டறிந்து அளிப்ப்படும் சிகிச்சை விவரங்கள் மகப்பேருக்குத் தேவையான ஸ்கேன்உட்படபரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள்.
நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை,மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறிதல்,இருதய நோய்கள் இ.சி.ஜி,சளி, சிறுநீர்,தொண்டை நோய் சிகிச்சை,கண் குறைபாடுகள் மற்றும் தோல் வியாதிகள்,முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ் பரிந்துரையின் பேரில் விலையில்லா பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இம்முகாமில் ஆத்தூர் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் சுற்று வட்டாரம் சேர்ந்த பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிகிச்சை சிகிச்சை பெற்றனர்.முகாமை துவக்கி வைத்துது கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்புப் பட்டகம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய துணைத் தலைவர்,மீ. வே. கர்ணாகரன் மற்றும்ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சற்குணம்,ஆத்தூர் ஊராட்சி கழக செயலாளர் சரவணன்,ஒன்றிய கவுன்சிலர் தீபா நாகராஜ்,ஆத்தூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர்.பத்மநாபன் வழக்கறிஞர் சரவணன் மகளிர் அணி துளசி அம்மாள் மற்றும் மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments