• Breaking News

    ஈரோடு மாவட்டம் ,கோபிசெட்டிபாளையம் - வைர விழா மேனிலைப் பள்ளி, ஆசிரியைக்கு மேன்மதி நல்லாசிரியர் விருது - 2024


    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் -வைர விழா மேனிலைப் பள்ளியில்  உதவித் தலைமையாசிரியையாகவும், மேனிலை வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாட ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார் சா.ரா. இந்திரா.கல்விச் சேவையில் 20 -ஆண்டுகள் பணியாற்றிய இவர் சேவையைப் பாராட்டி கோவையில் உள்ள அரசுடன் பதிவு செய்யப்பட்ட மேன்மதி தமிழ் மன்றம் மற்றும் நீலகிரி அன்னை சாரதாமணியன் ஆறக்கட்டளைசார் அனைத்து இந்திய உலக சாதனை புத்தகம் அகில இந்திய மெய் நிகர் பல்கலைகழகம் இணைந்து நடத்தியது இந்த விருது நியமத்தை விண்ணப்பித்து இணையதள நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டு  ஆசிரியர் தினமான 5/09/2024 அன்று இவ்விருதை சா.ரா.இந்திரா அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தது .

    விருது பெற்ற ஆசிரியை 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த  ஆண்டுகளில் 100% தேர்ச்சி விழுக்காடு காட்டியுள்ளார். வைரம் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளராகவும், கோபியில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களில் உறுப்பினராகவும்  இருந்து சேவை புரிந்து வருகிறார். கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு  நல்வழி காட்டியாக விளங்கி வருகிறார்.

     பள்ளி தாளாளர்  கே.கே.தட்சிணாமூர்த்தி  அவர்கள் விருது பெற்ற சா.ரா.இந்திரா அவர்களை வாழ்த்தி கௌரவித்தார். பள்ளி தலைமையாசியர், உதவித் தலைமைஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்கள். இந்த விருதை வாங்க உறுதுணையாய் உடனிருந்த ஏ.டி.எல் தொழில்நுட்ப ஆய்வக பொறுப்பாசிரியர் ஶ்ரீ.ஹரிஹரன், இயற்பியல் ஆசிரியை மா.சங்கீதா, இளநிலை உதவியாளர் கதிரேசன், அலுவலக உதவியாளர் சிவகாமி,  உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமாரசாமி ஆகியோருக்கு தன் நன்றி கலந்து பாராட்டுகளை ஆசிரியை சா.ரா.இந்திரா  தெரிவித்தார். மற்றும் இந்திய உலக சாதனைகள் மெய்நிகர் பல்கலைக்கழகம் மற்றும் மேன்மதி தமிழ் மன்றம், அன்னை சாரதா மணியன் அறக்கட்டளை இவருக்கு லெட்டர் ஹெட் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments