தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளிகள் நலவாரிய உறுப்பினர் பதிவு செய்யும் முகாமை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி , அந்தியூர் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறையின் சார்பில்அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யும் முகாமை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்து விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பதிவு செய்தவர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அட்டையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் , தொமுச சங்க தலைவர் தங்கமுத்து ,தொமுச பொது செயலாளர் கோபால் , டாஸ்மாக் தொ.மு.ச தலைவர் முருகேசன் , அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் , அந்தியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி , அந்தியூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் , பேரூராட்சி மன்றம் உறுப்பினர்கள் கவிதா , சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments