தமிழகத்தில் இனி ரூ. 20 பத்திரங்களை பயன்படுத்த வேண்டாம்- தமிழக அரசு உத்தரவு - MAKKAL NERAM

Breaking

Thursday, September 19, 2024

தமிழகத்தில் இனி ரூ. 20 பத்திரங்களை பயன்படுத்த வேண்டாம்- தமிழக அரசு உத்தரவு



 தமிழகத்தில் இனி சாதாரண ஒப்பந்தங்களுக்கு 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதாவது வீடு மற்றும் கடை வாடகை உள்ளிட்ட சாதாரண ஒப்பந்தங்களுக்கு பெரும்பாலும் 20 ரூபாய் பத்திரங்களை தான் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக வீட்டு வாடகைக்கு 20 ரூபாய் பத்திரங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் குறைந்த மதிப்பிலான பத்திரங்களை நிறுத்த தற்போது அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ரூ. 20 ரூபாய் பத்திரங்களை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக 200 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பத்திர பதிவு ஒப்பந்தங்களை பதிவு செய்யாமல் வைத்திருந்தாலும் 20 ரூபாய் பத்திரங்களுக்கு பதில் 200 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment