அமெரிக்கா சென்றார் நடிகர் கமல்ஹாசன்.... எதற்காக தெரியுமா....? - MAKKAL NERAM

Breaking

Saturday, September 7, 2024

அமெரிக்கா சென்றார் நடிகர் கமல்ஹாசன்.... எதற்காக தெரியுமா....?

 


இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். சிறுவயது முதலில் நடித்து வரும் கமல்ஹாசன் தற்போதும் முன்னணி ஹீரோவாக ஜொலிக்கிறார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைஃப், கல்கி 2898 ஏடி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தற்போது ஏஐ தொழில்நுட்பம் குறித்து படிப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்று உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.கிட்டத்தட்ட 90 நாட்கள் அமெரிக்காவில் ஏஐ பயிற்சி எடுக்க இருக்கிறாராம். ஆனால் படப்பிடிப்பு இருப்பதால் 45 நாட்கள் மட்டுமே ஏஐ பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளாராம். 

மேலும் தற்போது ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அதன் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக அதனை படிப்பதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment