இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் முன் திமுக பெண் கவுன்சிலர் தர்ணா - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 25, 2024

இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் முன் திமுக பெண் கவுன்சிலர் தர்ணா

 


சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் முன் திமுக பெண் கவுன்சிலர் இஸ்ரின் பேகம் போர்வையை விரித்து தர்ணாவில் ஈடுபட்டார்.பேரூராட்சி கூட்டத்தில் பங்கேற்ற அவர், தனது 15 வது வார்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தன்னால் வெளியே தலை காட்ட முடியவில்லை என்றும் கூறி கூட்டத்தைப் புறக்கணித்தார். பின்னர், பேரூராட்சி அலுவலகம் முன் போர்வையை விரித்து தர்ணாவில் ஈடுபட்டார்.பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலர்கள் சமாதானம் செய்ததையடுத்து, இஸ்ரின் பேகம் போராட்டத்தை கைவிட்டார்.

No comments:

Post a Comment