• Breaking News

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி


    மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் 'சி'  மண்டல பிரிவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டிகளில் ஆண்களுக்கான  பூப்பந்து விளையாட்டு போட்டி செப்டம்பர்  26 ம் தேதி  திண்டுக்கல்லில் உள்ள எஸ்.எஸ்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளின்  பூப்பந்து விளையாட்டு அணி மாணவர்கள் பங்கேற்றனர். நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின்  பூப்பந்து விளையாட்டு அணி பங்கேற்று நாக் அவுட் முறையில் இரு அணிகளைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் திண்டுக்கல் ஜி டி என் கல்லூரி அணியுடன் போராடி வெற்றியின் விளிம்பு வரை சென்று சொற்ப புள்ளியில் வெற்றி வாய்ப்பினை நழுவ விட்டு ரன்னர்ஸ் அப் கோப்பையை கைப்பற்றினர். இப் போட்டியில் பங்கு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன. இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் ஹாஜி எம். தர்வேஸ் முகைதீன், ஆட்சிமன்ற குழு தலைவர் ஜனாப். எஸ் . முகமது மீரான், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் ஹாஜி முனைவர் . ஹச் . முகமது மீரான், மற்றும் உடற்கல்வி இயக்குனர் டாக்டர். பா. அக்பர் அலி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

    No comments