உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டு தாம்பரம் பேருந்து நிலையம் அருகே திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டு தாம்பரம் பேருந்து நிலையம் அருகே வணக்கத்திற்குரிய மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் மற்றும் கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன் அவர்களும் கழகத் கழகத் தோழர்களும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மாநகர துணைச் செயலாளர் பொன் சதாசிவம்,முன்னாள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பா.குறிஞ்சி சிவா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விக்கி (எ) விக்னேஸ்வரன், மருத்துவர் அணி தலைவர் கிருத்திகா தேவி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் நடராஜ், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இன்ஜினியர் ராமமூர்த்தி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாநகர சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் பேராசிரியர் ரொனால்ட் ரொசாரியோ, முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் இரா.தேவராஜ், மாநகர தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பழக்கடை ராஜாங்கம், மாநகர தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஜெகநாதன், 54வது வட்டக் கழக செயலாளர் க.குருநாதன், முரளி, ராமு உள்ளிட்ட இளைஞர் அணி மாணவர் அணி உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments