முதல்வர் ஸ்டாலினுக்கு ஜால்ரா மட்டுமல்ல பல்லக்கும் தூக்குவேன் - இவிகேஎஸ் இளங்கோவன் - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 25, 2024

முதல்வர் ஸ்டாலினுக்கு ஜால்ரா மட்டுமல்ல பல்லக்கும் தூக்குவேன் - இவிகேஎஸ் இளங்கோவன்

 


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் தற்போது கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முதல்வர் ஸ்டாலினுக்கு தான் ஜால்ரா மட்டுமல்ல பல்லக்கு கூட தேவைப்பட்டால் தூக்கவே என்று கூறியுள்ளார். அதன் பிறகு தமக்கு கட்சியை விட நாடே முக்கியம் என்றும், நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படக் கூடாது என்றால் பாசிச கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அதன் பிறகு தமிழகத்தில் பாசிச சக்திகளுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் நிற்கிறார். எனவே நான் அவரை பாராட்டுகிறேன். இதற்காக அவருக்கு ஜால்ரா அடிப்பேன் என்று கூறினால் பரவாயில்லை. அதற்காக ஜால்ரா மட்டுமல்ல பல்லக்கு கூட தேவைப்பட்டால் தூக்குவேன் என்று கூறியுள்ளார். மேலும் இவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் ஸ்டாலினுக்கு தேவைப்பட்டால் ஜால்ரா மட்டும் அல்ல பல்லக்கு கூட தூக்குவேன் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

No comments:

Post a Comment