3 லட்சம் கடனுக்கு 40 லட்சம் கேட்டு வீட்டை பூட்டிய கந்துவட்டிகாரர்..... நடுதெருவில் நிற்கும் குடும்பம் - MAKKAL NERAM

Breaking

Saturday, October 26, 2024

3 லட்சம் கடனுக்கு 40 லட்சம் கேட்டு வீட்டை பூட்டிய கந்துவட்டிகாரர்..... நடுதெருவில் நிற்கும் குடும்பம்

 


சேலம் மாவட்டத்தில், கந்துவட்டி கொடுமை காரணமாக வீடிழந்த குடும்பம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் தனது குடும்பத்துடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்தார்.பழனியம்மாள் தனது கணவர் சின்னப்பனுடன் 7 ஆண்டுகள் முன்பு மருத்துவ செலவுக்காக ரூ.3 லட்சம் கடனாக பெற்றுள்ளனர்.

 இதற்காக மொத்தமாக ரூ.15 லட்சம் வரை கட்டியுள்ள நிலையில், கடன் கொடுத்தவர்கள் இன்னும் ரூ.25 லட்சம் தர வேண்டும் எனக் கூறி வீட்டை பூட்டிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் வீட்டை இழந்த அவர்களுக்கு வாழ இடமே இல்லாமல் தெருவில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த போதும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பழனியம்மாள் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் பலமுறை மனஅழுத்தம் அடைந்த அவர், தீக்குளிக்க முயற்சிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டதாகக் கூறினார். அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment