கும்மிடிப்பூண்டி: காமாட்சிபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Friday, October 25, 2024

கும்மிடிப்பூண்டி: காமாட்சிபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றது







திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் அயநல்லூர் ஊராட்சி காமாட்சி புரம் கிராமத்தில் ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்றது.இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகருக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி  மஹாகும்பாபிஷே நடைபெற்றது.தொடர்ந்த  சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து  கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர்.இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தப்பட்டு பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

இதனையடுத்து 48 நாட்கள் தொடர்ந்து மண்டல அபிஷேகம், சங்கு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை மண்டல பூஜையின் இறுதி நாளான 48 வது நாள் பூஜை நடைபெற்றது.நிகழ்வை ஒட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.

 இதில் அயநெல்லூர் மற்றும்  கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளை  சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வில் அயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கல்வி செல்வம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் கோவில் நிர்வாகிகள், கிராம இளைஞர்கள். கலந்து கொண்டனர்.பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் 400க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment