திருவள்ளூர்: குடும்பத்தை காப்பாற்ற பல்சர் பைக்கில் வந்து யாசகம் எடுக்கும் நபர் - MAKKAL NERAM

Breaking

Saturday, October 26, 2024

திருவள்ளூர்: குடும்பத்தை காப்பாற்ற பல்சர் பைக்கில் வந்து யாசகம் எடுக்கும் நபர்


 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் ரமேஷ் ‌(47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுல் (35) என்ற மனைவியும்,11-ம் வகுப்பு படிக்கும் ஜோதி‌ (17) என்ற மகளும், 12-ம் வகுப்பு படிக்கும் தனுஷ் (18) என்ற மகனும், 10-ம் வகுப்பு படிக்கும் அஸ்வினி ‌(14) என்ற மகளும் இருக்கிறார்கள். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சர்க்கரை நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனால் அவருடைய ஒரு கால் எடுக்கப்பட்டது. 

பின்னர் வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவருடைய குடும்பம் வறுமையில் வாடிய நிலையில் தன் மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக அவர் பிச்சை எடுக்க தொடங்கினார்.இதன் காரணமாக அவர் தினந்தோறும் பல்சர் பைக்கில் சென்று அருகே உள்ள பகுதிகளில் பிச்சை எடுக்கிறார். நாள்தோறும் அவருக்கு 2000 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது. 

இவருக்கு ஒரு கால் இல்லாத நிலையில் முதலில் குடும்பத்தை காக்க பிச்சை எடுத்தாலும் தற்போது அதையே ‌ தொழிலாக மாற்றிவிட்டார். இவர் தற்போது ஒரு பல்சர் பைக், 15000 மதிப்புள்ள பவர் பேங்க், 40,000 மதிப்புள்ள செல்போன் போன்றவைகளை வைத்துள்ளாராம். மேலும் படித்து முடித்த இளைஞர்கள் கூட வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் பிச்சை எடுக்கும் ஒருவர் டேக்ஸ் கட்டாத பணக்காரராக வலம் வருவது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment