மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷன் அருகே பாட்டாளி தொழிற்சங்க பேரவை ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு - MAKKAL NERAM

Breaking

Wednesday, October 16, 2024

மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷன் அருகே பாட்டாளி தொழிற்சங்க பேரவை ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு


மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் பாட்டாளி தொழிற்சங்க பேரவையுடன் இணைந்த மயிலாடுதுறை மாவட்ட கார் ஆட்டோ வேன் ஓட்டுனர்கள் சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சித்தமல்லி பழனிச்சாமி மாநில செயற்குழு உறுப்பினர் விசிகே மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் பிரசன்னா நகர செயலாளர் ராஜ்குமார் பெரியசாமி கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் செழியன் மற்றும் நிர்வாகிகள் கமல் ராஜா சேட்டு ரவி முட்டை குமார் செந்தில் ராஜன் ஆனந்தராஜ் பாம்பே சக்தி முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் சங்கத்தின் பெயர் பலகையினை குத்துவிளக்கேற்றி நிர்வாகிகள் திறந்து வைத்தனர் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

No comments:

Post a Comment