திருப்பதி கோவிலுக்கு செல்லும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை மூடல்- தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதியில் மழைக்காலம் என்பதால் வானிலை ஆராய்ச்சியாளர்கள் வியாழக்கிழமையிலிருந்து 36 மணி நேரத்திற்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்தது. எனவே திருப்பதி தேவஸ்தானம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காணொளி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் அதிகாரி வெங்காயா சௌத்ரி ஆகியோர் பங்கேற்றனர். இந்த முன்னேற்பாடு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது.
கனமழை ஏற்பட்டால் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பாதுகாப்பு அமைப்புகளிடமும் விரிவாக கேட்டறிந்தனர். தொடர் கனமழையால் ஏற்கனவே கோகர்ப்பம் சர்க்கிள் வழியாகப் பாபவிநாசனம் பகுதிக்கு செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவாரி வெட்டு நடைபாதை முழுவதுமாக மூடப்படுகிறது. இந்த கனமழை காரணமாக தற்போது பக்தர்கள் நடைபாதையில் செல்வதற்கு அனுமதி இல்லை.நடைபாதை திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். கனமழை அதிவேக காற்றின் காரணமாக மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தாலோ, நிலச்சரிவு ஏற்பட்டாலோ உடனே தக்க நேரத்தில் பாறைகளை அகற்றுவதற்கு பாதுகாப்பு பணியில் காவல்துறையினரிட ம் விசாரிக்கப்பட்டது.மின்தடைகள் நிகழ்ந்தால் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் அவற்றிற்கு தேவையான எரிபொருள்களை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். இதுகுறித்து மின் பொறியாளர்களிடம் விவரங்கள் கேட்டறியப்பட்டது.
கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு ஏதாவது உடல் நலக்குறைவு. அவசர மருத்துவ உதவி தேவைப்படும் எனவே தயார் நிலையில் எப்பொழுதும் மருத்துவர்கள், மருத்துவப் பொருள்கள், மருந்துகள் உள்ளதா என சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விவாதிக்கப்பட்டது.கனமழை குறித்த நிலவரங்களை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்க எஸ்.வி.பி.சி சேனல்களுக்கு மற்றும் சமூக வலைத்தளங்களுக்கும் உத்தரவிடப்பட்டது.திருப்பதி தேவஸ்தானத்தின் போக்குவரத்து துறையில் பொது மேலாளரிடம் போக்குவரத்து குறித்த விவரங்களை கேட்டறியப்பட்டது.
மேலும் 15 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து பருவநிலை மாற்றங்களை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவர். இவ்வாறு இந்த காணொளி ஆலோசனை கூட்டத்தின் மூலம் முடிவுகள் விவாதிக்கப்பட்டன. இந்த காணொளி காட்சியில் இணை அதிகாரிகள் கௌதமி, வீரபிரம்மன், பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர்,பொறியாளர் சத்ய நாராயணன் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments