திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு - MAKKAL NERAM

Breaking

Saturday, November 2, 2024

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு


திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை என அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக பி.ஆர்.நாயுடு அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெகன் மோகன் தலைமையிலான அரசு, திருப்பதி தேவஸ்தானம் விஷயங்களில் பல தவறுகளை செய்துவிட்டதாக கூறினார்.

இந்து மதத்தினர் மட்டுமே பணியாற்ற வேண்டும். ஆனால் பல மதத்தினர் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.அவ்வாறு மாற்று மதத்தை சேர்ந்த ஊழியர்களை கட்டாய ஓய்வுபெற வைப்பதா அல்லது மாற்றுப் பணி அளிக்கப்படுவதா என்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்படும் எனவும் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார்.

No comments:

Post a Comment