ராமநாதபுரம்: பேருந்தில் இருந்து இறங்க மறுத்து அடம்பிடித்த போதை முதியவர் - MAKKAL NERAM

Breaking

Sunday, November 3, 2024

ராமநாதபுரம்: பேருந்தில் இருந்து இறங்க மறுத்து அடம்பிடித்த போதை முதியவர்

 


ராமநாதபுரத்தில் இருந்து அரசு பேருந்து பரமக்குடி நோக்கி செல்ல தயாராக இருந்தது. அந்த பேருந்தில் முதியவர் ஒருவர் ஏறி உள்ளார். முதியவர் மது அருந்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் போதையில் இருந்த முதியவர் உத்திரகோசமங்கைக்கு டிக்கெட் தருமாறு கேட்டுள்ளார். 

பேருந்து உத்தரகோசமங்கைக்கு செல்லாது.நீங்கள் கீழே இறங்குங்கள் என நடத்துனர் கூறியுள்ளார். அதற்கு முதியவர் மறுப்பு தெரிவித்து கீழே இறங்க மாட்டேன் என அடம் பிடித்துள்ளார். உடனே நடத்துனர் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் பெருந்தை நிறுத்தி போலீசார் உதவியுடன் முதியவரை கீழே இறக்கி விட்டார். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment