ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி சூடு..... 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - MAKKAL NERAM

Breaking

Thursday, December 19, 2024

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி சூடு..... 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

 


ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள பெஹிபாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர், அவர்களை தேடும் பணியில் இறங்கினர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதனால் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டனர். அதன்படி பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர். இதில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும், 2 பாதுகாப்பு படையினருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment