9 மணி நேர போராட்டம்..... சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் மாயமான கார் ஓட்டுனர் கதி என்ன...? - MAKKAL NERAM

Breaking

Wednesday, December 18, 2024

9 மணி நேர போராட்டம்..... சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் மாயமான கார் ஓட்டுனர் கதி என்ன...?


 சென்னை துறைமுகத்திலிருந்து கடலோர காவல் படை வீரர் ஒருவரை அழைத்து செல்வதற்காக தனியார் டிராவல்ஸ் கார் ஒன்று வந்துள்ளது. இதில் கொடுங்கையூர் சேர்ந்த முகம்மது சகி என்பவர் ஓட்டுனராக இருந்துள்ளார். இந்நிலையில் துறைமுகத்தில் கடலோர காவல் படை வீரரை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் சகி காரை ரிவர்ஸ் எடுக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார்நிலை தடுமாறி கடலுக்குள் பாய்ந்து உள்ளது. 

அப்போது காரின் கதவை உடைத்து கடலோர காவல் படை வீரர் தப்பியுள்ளார். இருப்பினும் கடலிலிருந்து வெளியே வந்தவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த சக கடலோர காவல் படை வீரர்கள் மயங்கிய நிலையில் கிடந்த அவரரை மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அதே சமயம் கடலில் மூழ்கிய கார் ஓட்டுநர் சகியை மீட்கும் பணியில் 30-க்கும் மேற்பட்ட கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதோடு கார் ஓட்டுநர் முகமது சகியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

மேலும் கிரேன் மூலம் கார் தூக்கப்பட்ட நிலையில் அதில் ஓட்டுநர் சகி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. கார் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில் 9:00 மணி நேரம் ஆகியும் ஓட்டுனர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் முகமது சகியின் உறவினர்கள் காவல்துறையினர் உரிய பதில் அளிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

No comments:

Post a Comment