மன்மோகன் சிங் மறைவு..... கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய இந்திய வீரர்கள் - MAKKAL NERAM

Breaking

Friday, December 27, 2024

மன்மோகன் சிங் மறைவு..... கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய இந்திய வீரர்கள்

 


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது.இதில், 3 டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் 2ம் நாளான இன்று தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 455 ரன்கள் எடுத்துள்ளது.இந்நிலையில், 2ம் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணி வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை கட்டி விளையாடி வருகின்றனர். இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மறைந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

No comments:

Post a Comment