உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ்..... மன்கிபாத்தில் பிரதமர் மோடி உரை - MAKKAL NERAM

Breaking

Sunday, December 29, 2024

உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ்..... மன்கிபாத்தில் பிரதமர் மோடி உரை

 


உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்பதில், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என்று பிரதமர் மோடி மன்கிபாத்தில் பேசினார். பிரதமர் மோடி இன்று தனது வானொலி நிகழ்ச்சியின் மூலம் ஆற்றிய உரையில், ‘இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது.2025ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அன்று, நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி 75 ஆண்டுகள் நிறைவு அடைகிறது. 

நாட்டு மக்களை இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மரபுடன் இணைக்க ஏதுவாக, http://Constitution75.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தை பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் குழந்தைகள் பார்க்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் என்பதில், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை.உலக நாடுகளில் தமிழ் மொழியை கற்று கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கடந்த மாத இறுதியில் பிஜியில் ஒன்றிய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டது.வரும் ஜனவரி 13ம் தேதி முதல் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி ெதாடங்குகிறது. தென் அமெரிக்காவில் பராகுவே நாட்டின் இந்தியர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்காது. பராகுவேயில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆயுர்வேத ஆலோசனை வழங்கப்படுகிறது.இந்திய கலாசாரம் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி வருகிறது. சில வாரங்களுக்கு முன், எகிப்தில் இருந்து, 23,000 மாணவர்கள் இந்திய கலாசாரம் தொடர்பான ஓவியப் போட்டியில் கலந்து கொண்டனர்’ என்று கூறினார்.

No comments:

Post a Comment