திருவண்ணாமலையில் திமுக பேனரை கிழித்த மக்கள்..... வைரலாகும் வீடியோ - MAKKAL NERAM

Breaking

Thursday, December 5, 2024

திருவண்ணாமலையில் திமுக பேனரை கிழித்த மக்கள்..... வைரலாகும் வீடியோ

 


பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக விழுப்புரத்திற்கு சென்றுள்ளார். அவர் இருவேல்பட்டு பகுதிக்கு சென்றபோது காரில் இருந்தபடியே அவர் பார்வையிட்டதாக தெரிகிறது.

வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்

ஏற்கனவே அந்த பகுதி மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சரை பார்த்ததும் கோபமடைந்த கிராம மக்கள் அவர் மீது சேற்றை வாரி இறைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மக்கள் உதயநிதி ஸ்டாலின் பேனரை கோபத்தில் கிழித்து அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனர்.

இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படாதவாறு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திமுக பேனரையும் கோபத்தில் மக்கள் கிழித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment