அந்தியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் பர்கூர் சோதனை சாவடியில் லாரி ஓட்டுனர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Monday, December 2, 2024

அந்தியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் பர்கூர் சோதனை சாவடியில் லாரி ஓட்டுனர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது

 


ஈரோடு மாவட்டம், அந்தியூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் பர்கூர்  சோதனை சாவடியில் லாரி  ஓட்டுனர்களை நிறுத்தி லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஒட்டகூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் ஒட்டகூடாது. குடிபோதையில் வாகனம் ஒட்டகூடாது.  தேவையில்லாத இடங்களில் வாகனங்கள் நிறுத்த கூடாது. தனி ஒருவராக ஒட்டாமல் கூடுதல் டிரைவருடன் செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றகூடாது. மலைப்பாதையில் செல்லும் போது ஒவ்வொரு வளைவுகளிலும் ஹாரன் அடித்து செல்லவேண்டும். ஆட்களை ஏற்றி செல்ல கூடாது. என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடன் பர்கூர் காவல் நிலைய  சிறப்பு உதவி ஆய்வாளர் பூ பாலசிங்கம், தலைமை காவலர் திருமால் உடனிருந்தனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment