கொலுசு திருகாணியை விழுங்கிய சிறுவன்..... சாமர்த்தியமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள் - MAKKAL NERAM

Breaking

Tuesday, December 17, 2024

கொலுசு திருகாணியை விழுங்கிய சிறுவன்..... சாமர்த்தியமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்

 


திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் பகுதியில் எருதுபட்டி கிராமத்தில் வசித்து வரும் 3 வயது சிறுவன் அவரது வீட்டில் கீழே கிடந்த கொலுசின் திருகாணியை விழுங்கியுள்ளார். இதனை கண்ட பெற்றோர் செய்வதறியாது திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை எக்ஸ்ரே செய்து பார்த்தபோது மூச்சுக் குழாய்க்குள் திருகாணி சிக்கி இருந்தது தெரிய வந்தது.

இதனை திருச்சி மருத்துவமனை மருத்துவர்கள் நவீன கருவிகள் மூலம் மிக நுணுக்கமாக செயல்பட்டு திருகாணியை வெளியே எடுத்தனர். பின்னர் சிறுவனை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்துள்ளனர். சிறுவன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மிக ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment