தவறான விதைநெல்லால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம்..... பிஞ்சிலே பழுத்த அறுவடை வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்குமா? - MAKKAL NERAM

Breaking

Monday, December 23, 2024

தவறான விதைநெல்லால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம்..... பிஞ்சிலே பழுத்த அறுவடை வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்குமா?


திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் பாண்டூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான நிலங்களில் நெல் பயிர் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த போகத்திற்காக கால நேரத்தில் விதை நெல் வழங்காததால் விவசாயிகள் திருவள்ளூரில் உள்ள தனியார் உர கடையில் விதை நெல் வாங்கி நாற்று விட்டு நடவு விவசாயம் செய்ய முற்பட்டனர் தரமற்ற விதை நெல் வழங்கியதால் நெற்பயிர் வளர்ச்சி அடையாமல் பிஞ்சிலே பழுத்தது போன்று நடவு நட்டு குறுகிய காலத்துக்குள்யே நெற்பயிர் வளர்ச்சி அடையாமல் நெற்கதிர்கள் வெளியே வர தொடங்கிவிட்டது.

இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது இது குறித்து திருவள்ளூர் மாவட்ட வேளாண்துறை பூண்டி வேளாண்மை துறை உதவி இயக்குனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை தரமற்ற விதை நெல் விற்பனை செய்த விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் பாண்டூர் கிராமத்தைச் சார்ந்த விவசாயிகள் ரவிச்சந்திரன்,பாபு ,பிரவீன்குமார்,சுரேஷ் மற்றும் பிற விவசாயிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட வேளாண் இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

 பாண்டூர் கிராமத்தில் விவசாயிகள் தங்களது நிலத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கண்காட்சி போன்று அனைவரிடமும் காண்பித்து வருகின்றனர் வேளாண்மை துறை விழித்துக் கொள்ளுமா போராட்டத்தை சந்திக்குமா என்பதை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தான் முடிவு செய்யும்.

No comments:

Post a Comment