இறந்த கணவர் சடலத்துடன் வாழ்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட மனைவி - MAKKAL NERAM

Breaking

Sunday, December 29, 2024

இறந்த கணவர் சடலத்துடன் வாழ்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட மனைவி

 


சிவகங்கை மாவட்டத்தில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பரிமளம்(56) என்ற பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் மூர்த்தி(62) உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக நடமாட்டம் இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. நேற்று காலை அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நீண்ட நேரமாக கதவை தட்டினர். ஆனாலும் கதவை யாரும் திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது மூர்த்தி அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு அருகிலேயே பரிமளம் இருந்துள்ளார். போலீசார் பரிமளத்திடம் கேட்டபோது கணவர் தூங்குவதாகவும், அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறியதாகவும் தெரிகிறது. போலீசார் உடனே மூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மூர்த்தி இருந்து 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment