இந்தியர்கள் விசா இல்லாமல் வரலாம்..... ரஷ்யா அதிரடி அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Thursday, December 19, 2024

இந்தியர்கள் விசா இல்லாமல் வரலாம்..... ரஷ்யா அதிரடி அறிவிப்பு


 இந்திய சுற்றுலா பயணிகளுக்கு சமீபத்தில் ரஷ்யா அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய சுற்றுலா பயணிகள் பலரும் ஒவ்வொரு நாடாக சென்று சுற்றிப் பார்ப்பதை சமீப காலங்களாக விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் கடந்த 2023 ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கு விசா இல்லாமல் வணிக ரீதியாகவும், சுற்றுலா பயணிகள் ரஷ்யாவிற்கு சென்ற சுற்றி பார்க்கவும் ரஷ்ய அரசாங்கத்திடம் இது குறித்த ஒப்பந்தங்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. இது குறித்து ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இ- விசா ஏற்பாடு செய்து கொள்ளும் முறையை ரஷ்ய அரசு உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகுறித்து ரஷ்ய சுற்றுலாத்துறை நிர்வாகி எவ்ஜெனி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, இந்திய பயணிகள் ரஷ்யாவிற்கு விசா இல்லாமல் பயணம் செய்வதற்கு ரஷ்ய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யாவிற்கு விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள அறிவிப்பு வெளியானால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

இ-விசா பெறுபவர்களின் எண்ணிக்கையில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கடந்த 6 மாத காலங்களில் மட்டுமே இந்தியாவில் இருந்து மாஸ்கோவிற்கு 28,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.2 மடங்கு அதிகமாகும் என தெரிவித்தார். இந்திய பயணிகள் பாஸ்போர்ட் மூலம் மட்டுமே 62 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர் அடுத்த ஆண்டிலிருந்து ரஷ்யாவும் இந்த நாடுகளில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment