கடலூர்: மாணவிக்கு பிறந்த குழந்தை..... அரசு பள்ளி ஆசிரியர் கைது - MAKKAL NERAM

Breaking

Thursday, December 19, 2024

கடலூர்: மாணவிக்கு பிறந்த குழந்தை..... அரசு பள்ளி ஆசிரியர் கைது

 


கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இங்கு, கடந்தாண்டு பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற 17 வயது மாணவி ஒருவர், தற்போது சென்னையில் பி.எஸ்சி., நர்சிங் படிக்கிறார். இந்நிலையில், அந்த மாணவிக்கு நான்கு நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது, மேல்நிலை பள்ளியில் படித்தபோது வேதியியல் ஆசிரியர் மலர் செல்வன் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.மாணவியின் பெற்றோர், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

விசாரணையில், புடையூர் காலனியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் மலர்செல்வன், 50, என்பவர் மாணவியை பலாத்காரம் செய்தது தெரிந்தது.அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, மலர்செல்வனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு திருமணமாகி, மனைவி, இரு பெண் குழந்தைகள், ஆண் குழந்தை உள்ளது.

No comments:

Post a Comment